Rajasthan royals jersey
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய அறிவிப்பு; மகிழ்ச்சியில் உள்ளூர் மக்கள்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு வெற்றியை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இதில் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முன்னேறும் நோக்கிலும், மறுபக்கம் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியைத் தழுவாமால் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது வெற்றி கணக்கை தொடரும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Rajasthan royals jersey
Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56