Rashid khan: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றது. மேற்கொண்டு எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனானது எதிவரும் ஜனவரி 09ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 08ஆம் தேதி நடைபெறவுள்ளது. Read More...