Sai kishore: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு; பஞ்சாப்பை 142 ரன்னில் சுருட்டியது குஜராத்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது முதல் பாதியைக் கடந்து தற்போது இரண்டாம் பாதியை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிரங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் சாம் கரண் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த பிரப்ஷிம்ரன் சிங் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பௌ தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 9 ரன்களோடு நடையைக் கட்ட, மறுபக்கம் 20 ரன்களைச் சேர்த்த நிலையில் கேப்டன் சான் கரணும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா இப்போட்டியிலாவது அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். Read More...