Sl vs nz 1st test: Cricket News & Match Updates
எந்த அணிக்கு எதிராகவும் டெஸ்டில் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது: தனஞ்செயா டி சில்வா
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்களையும், குசால் மெண்டிஸ் 50 ரன்களைச் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 340 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக டாம் லதாம் 70 ரன்களௌயும், டேரில் மிட்செல் 57 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அதன்பின் 35 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதில் கருணரத்னே 83 ரன்களும் சண்டிமால் 61 ரன்களும் அடித்தனர்.நியூசிலாந்து சார்பில் அஜாஸ் படேல் 6 விக்கெட் வீழ்த்தினார். Read More...