Sydney thunder vs sydney sixers: Cricket News & Match Updates
கொன்ஸ்டாஸை போல்டாக்கிய எட்வர்ட்ஸ் - காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணிக்கும் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் இனை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டேவிட் வார்னர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் சிட்னி தண்டர் அணி 5.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின் மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Sydney thunder vs sydney sixers - Tesst
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16