Tn vs kar: Cricket News & Match Updates
SMAT 2024: கர்நாடகா அணியிடம் படு மோசமான தோல்வியை தழுவியது தமிழ்நாடு!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கர்நாடகா அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜெகதீசன் ரன்கள் ஏதுமின்றியும், பாபா இந்திரஜித் 5 ரன்னிலும், பூபதி குமார் ஒரு ரன்னிலும், விஜய் சங்கர் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, கேப்டன் ஷாருக் கானும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் முகமது அலி 15 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் வருண் சக்ரவர்த்தி 24 ரன்களைச் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அட்டமிழந்தனர். Read More...