Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலி விஷயத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் - ஏபிடி வில்லியர்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய வீரர் விராட் கோலி விலகினார். ஆனால் அவர் எந்த காரணத்திற்காக விலகினார் என்பது தெரியாமலேயே இருந்தார். அச்சமயத்தில் தான் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ், விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு 2ஆவது குழந்தை பிறக்கவுள்ளது. இதன் காரணமாகவே விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக தெரிவித்திருந்தார். Read More...