Virat kohli: Cricket News & Match Updates
உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலிய வாரியம்; விரட கோலிக்கு கேப்டன் பதவி!
கடந்த மாதம் தொடங்கிய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்பான, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு நடப்பு உலகக் கோப்பைக்கான சிறந்த அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
அதில் விராட் கோலி உள்ளிட்ட 4 இந்திய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள 11 பேர் கொண்ட சிறந்த அணியில், “குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர், தென் ஆபிப்ரிக்கா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), விராட் கோலி (இந்தியா, கேப்டன்), ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), மார்கோ ஜான்சென் (தென் ஆப்ரிக்கா), ரவீந்திரா ஜடேஜா (இந்தியா), முகமது ஷமி (இந்தியா), ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 12வது வீரராக இலங்கையின் தில்ஷன் மதுஷங்கா அறிவிக்கப்பட்டுள்ளார் Read More...