Afghanistan vs south africa: Cricket News & Match Updates
AFG vs SA, 1st ODI: 106 ரன்களில் சுருந்த தென் ஆப்பிரிக்கா; வரலாறு படைக்குமா ஆஃப்கானிஸ்தான்?
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் டோனி டி ஸோர்ஸி 11 ரன்களுக்கும், ரீஸா ஹென்ரிக்ஸ் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 2 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் 10 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தானர். Read More...