Dc vs mi: Cricket News & Match Updates
ஜஸ்ப்ரித் பும்ரா ஓவரில் அதிரடி காட்டிய ஃபிரேசர் மெக்குர்க் - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபிரேசர் மெக்குர்க் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் அபாரமாக விளையாடிய அவர், 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த அபிஷேக் போரெலும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். Read More...