Faf du plessis: Cricket News & Match Updates
எங்களது வெற்றியை நாங்கள் இப்படியே தொடர விரும்புகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. அதன்படி தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களையும், பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரைலீ ரூஸோவ் 61 ரன்களை எடுத்தார். பந்துவீச்சில் முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்போட்டியில் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. Read More...