Faf du plessis: Cricket News & Match Updates
MLC 2024: சதடித்த ஃபின் ஆலன்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டியில் யூனிகார்ன்ஸ்!
மேஜர் லீக் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணிக்கு ஃபின் ஆலன் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித் தள்ளினார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஃபின் ஆலன் அரைசதம் கடக்க, யூனிகார்ன்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களைக் குவித்தது. பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபிரேசர் மெக்குர்க் 18 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். ஆனாலும் தனது அதிரடியை கைவிடாத ஃபின் ஆலன் சதமடித்து மிரட்டிய நிலையில், 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 101 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களையும், ஹசன் கான் 27 ரன்களையும் சேர்த்தனர். Read More...