Heinrich klaasen: Cricket News & Match Updates
நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் வங்கதேச பவுலர்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 382 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவங்க வீரர் குயிண்டன் டீ காக் அபாரமாக விளையாட வழி சதமடித்து 174 ரன்கள் குவித்தார்.
அவருடன் கேப்டன் ஐடன் மார்க்ரம் 60, ஹென்றிச் கிளாசின் 90, டேவிட் மில்லர் 34 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் முகமது 2 விக்கெட்களை வைத்தார். அதைத்தொடர்ந்து 383 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு லிட்டன் தாஸ் 22, தன்ஸித் ஹசன் 12, நஜ்முல் சாண்டோ 0, கேப்டன் சாகிப் 1, ரஹீம் 8, மெஹதி ஹசன் 11 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். Read More...