Karun nair: Cricket News & Match Updates
ENGL vs INDA, Day 1: இரட்டை சதத்தை நெருங்கும் கருண் நாயர்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் அபிமன்யூஸ் ஈஸ்வரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிமன்யூ ஈஸ்வரன் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் சர்ஃப்ராஸ் கான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். Read More...