Kkr vs dc: Cricket News & Match Updates
6,6,4,0,4,6 - இஷாந்த் சர்மாவை பிரித்து மேய்ந்த சுனில் நரைன் - வைரலாகும் காணொளி!
கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரை கேகேஆர் அணி தரப்பில் கலீல் அஹ்மத் வீச அந்த ஓவரில் இரு பேட்டர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். அதன்பின் இரண்டாவது ஓவரில் பில் சால்ட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் மெல்லமெல்ல உயர்த்தொடங்கியது. Read More...