Pak vs afg: Cricket News & Match Updates
எங்கள் அணிக்கும், எங்கள் நாட்டிற்கும் பெருமையை தேடித் தர விரும்புகிறோம் - ஷாஹிதி!
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி சரித்திர வெற்றி பெற்று இருக்கிறது.இந்த தொடரில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆக இருக்கும் இங்கிலாந்து அணியை டெல்லியில் வைத்து வீழ்த்தி எல்லோருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஆஃப்கானிஸ்தான் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 74 ரன்கள் உதவி உடன் 282 ரன்கள் 50 ஓவர்கள் முடிவில் எடுத்தது. இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இரண்டு ஓவர்களை மீதம் வைத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில், உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக வீழ்த்தியது. Read More...