Pc vs pr pitch report: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Paarl Royals vs Pretoria Capitals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வி, இரண்டு முடிவில்லை என 09 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதற்கு முன் இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...