Sanju samson: Cricket News & Match Updates
ஆட்டத்தை முன்கூட்டியே முடிக்க தவறிவிட்டோம் - சஞ்சு சாம்சன்
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 32 ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 185 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்து அருமையான துவக்கத்தை தந்தது.
ராகுல் 49 ரன்களையும், அகர்வால் 67 ரன்களையும் குவித்து அசத்தினர். அதன்பின்னர் மார்க்ரம் 26 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 32 ரன்களையும் குவித்தனர். ஒருகட்டத்தில் எளிதாக வெற்றி பெறவேண்டிய பஞ்சாப் அணி இறுதி இரண்டு ஓவர்களில் 8 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் 5 ரன்களை மட்டுமே அடித்து 2 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. கடைசி ஓவரை அற்புதமாக வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி நான்கு ரன்கள் அடிக்க வேண்டிய வேளையில் ஒரே ரன்னை மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் அணிக்கு அசத்தலான வெற்றியை தேடி தந்தார். Read More...