Sanju samson: Cricket News & Match Updates
டேனியல் வெட்டோரியின் ஆலோசனை எங்களுக்கு பெரிதும் உதவியது - பாட் கம்மின்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரஜாஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ரன்களை அடித்தார். பந்துவீச்சில் டிரென்ட் போல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சிறப்பாக தொடங்கினாலு, ஷாபாஸ் அஹ்மத் மற்றும் அபிஷேக் சர்மாவின் எதிர்பாராத திருப்பத்தின் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் துருவ் ஜுரெல் இறுதிவரை போராடிய நிலையிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழ்னது 139 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. Read More...