Shaun pollock: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இருக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை கைப்பற்ற இந்திய அணி உற்று நோக்கி வருகிறது. கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து உள்ளதால் தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியானது கட்டமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடு எப்படி அமைகிறதோ அதை வைத்துதான் இந்திய அணியின் தேர்வும் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளதால் உலக கோப்பை தொடருக்கான அணி தேர்வு என்பது எவ்வாறு அமையும் என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. Read More...