Sl vs aus 1st test: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வரலாறு படைத்த நாதன் லையன்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதனாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விலையாடிய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் ஒரு சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
அந்தவகையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் நாதன் லையன் வீழ்த்தினார். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றதுடன், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார். Read More...