St kitts nevis patriots: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ஃபால்கன்ஸை வீழ்த்தி பேட்ரியாட்ஸ் த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி, இத்தொடரின் முதல் லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தி ஃபால்கன்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு டெடி பிஷப் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிஷப் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த ஃபகர் ஸமான் - கோஃபி ஜேம்ஸ் இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதத்தை நெருங்கிய ஃபகர் ஸமான் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து கோஃபி ஜேம்ஸ் 22 ரன்களுக்கும், சாம் பில்லிங்ஸ் 18 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். Read More...