Tamil cricket news
IND vs SL, 2nd ODI: கேஎல் ராகுல் அரைசதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் ஆடுகிறார். கடந்த போட்டியின்போது சாஹலுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. பதும் நிசாங்கா மற்றும் மதுஷங்காவிற்கு பதிலாக முறையே நுவனிந்து ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.
Related Cricket News on Tamil cricket news
-
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஆஸி ரத்து செய்ததையடுத்து ரஷித் கான் வெளியிட்டுள்ள ட்வீட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தத்தையடுத்து, தனது பிக் பேஷ் லீக் எதிர்காலம் குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன் என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் சூசகமாக ட்வீட் செய்துள்ளார். ...
-
கோலிக்கு ஒரு நியாயம், ரோஹித்திற்கு ஒரு நியாயமா? - மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்த கம்பீர்!
ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
பிபிஎல் 12: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை பந்தாடியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs SL,2nd ODI: குல்தீப், சிராஜ் அசத்தல்; 215 ரன்னில் இலங்கை ஆல் அவுட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA20 League: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
எஸ் ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
விராட் vs சச்சின்; கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த கங்குலி!
இலங்கையுடனான போட்டியில் சதமடித்த பிறகு புதிய சர்ச்சையில் சிக்கிய விராட் கோலிக்கு முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் தொடரை ரத்து செய்தது ஆஸ்திரேலியா; காரணம் இதோ!
ஆஃப்கானிஸ்தான் அணியுடன் நடக்கவிருந்த ஒருநாள் தொடரை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
எனக்கும் சச்சின் ஒரு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தினார் - ஜோ ரூட்!
தற்போது சில அற்புதமான வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஆனால் அப்போதே சச்சின் சாதித்ததைப் பாருங்கள் என இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை வீழ்த்தி தொடரை தக்கவைக்குமா இலங்கை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
SA 20 League: டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
டர்பர்ன் சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs NZ,2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA20 League: சொதப்பிய டாப் ஆர்டர்; டொனாவன் ஃபெரீரா காட்டடியால் தப்பிய சூப்பர் கிங்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷனகா இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறார் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை அணி கேப்டன் ஷனக்கா இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இலங்கை, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ...