Fatima sana: Cricket News & Match Updates
NZW vs PAK, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அரிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை ஷவால் சுல்ஃபிகர் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முனீபா அலி - மரூஃப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா அலி 35 ரன்களிலும், மரூஃப் 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் நிதான் தாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More...