Icc rankings: Cricket News & Match Updates
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடம் பிடித்து அசத்திய ஜோ ரூட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆட்டநாயகனாக மார்க் வுட்டும், தொடர் நாகன் விருதினை வெஸ்ட் இண்டீஸின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் இங்கிலாந்து கஸ் அட்கின்ஸன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில், பேட்டர்களுக்கான தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். முன்னதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். Read More...