Icc t20 world cup 2024: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை விராட், ரோஹித் விளையாட வேண்டும் - பிரையன் லாரா!
ஐசிசியின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது. இந்த நிலையில் வரவுள்ள டி20 உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடி முக்கியமான ஆட்டத்தில் தோல்வி ஏற்படுவது சில சமயங்களில் நடக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவத்துக்கு மாற்று இல்லை. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். Read More...