Indu19 vs uaeu19: Cricket News & Match Updates
யு19 ஆசிய கோப்பை 2024: சூர்யவன்ஷி, ஆயூஷ் அதிரடியில் யுஏஇ-யை பந்தாடியது இந்தியா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய் அரபு அமீரக அண்டர்19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அண்டர்19 அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஆர்யன் சக்சேனா - அக்ஷத் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆர்யன் சக்சேனா 9 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய யாயின் ராய் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஈதன் டிசோசா 17 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான அக்ஷத் ராய் 26 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய முகமது ரியான் கான் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் அயான் அஃப்சல் கான் 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Indu19 vs uaeu19 - Tesst
யு19 ஆசிய கோப்பை 2024: யுஏஇ அணியை 137 ரன்னில் சுருட்டியது இந்தியா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16