Rr vs kkr: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஸ்லோ ஓவர் ரேட்; ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைனின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவெல் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. Read More...