Sa vs wi 3rd odi: Cricket News & Match Updates
SA vs WI, 3rd ODI: கிளாசென் சதத்தால் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 14, ஷமாரா ப்ரூக்ஸ் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த கிங் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். Read More...