Washington sundar: Cricket News & Match Updates
IND vs NZ: ரன் அவுட் குறித்து வாஷிங்டன் சுந்தர் ஓபன் டாக்!
ஜனவரி 29ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வெற்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு நன்றாக இருக்கும் என்பதால் யுஸ்வேந்திர சகல் பிளேயிங் லெவனில் எடுத்து வரப்பட்டார். அதற்கேற்றார்போலவே இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் மளமளவென நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரன்களையும் கட்டுப்படுத்தினர்.
நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எவரும் 20 ரன்களை எட்டவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்தது. குறைந்த இலக்கை பின்தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாகவே இருந்தது. 3 விக்கெட்டுகளை 50 ரன்களுக்குள் இழந்து தடுமாறியபோது வாஷிங்டன் சுந்தர் உள்ளே வந்தார். அவருக்கும் சூரியகுமார் யாதவிற்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டதால், வாஷிங்டன் சுந்தர் ரன் அவுட் மூலம் வெளியேற்றப்பட்டார். Read More...