Yuvraj singh: Cricket News & Match Updates
யுவராஜ் சிங் கொடுத்த உத்வேகம் நான் இந்தியாவுக்காக விளையாட உதவியது - ஸ்ரீசாந்த்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று தம்முடைய 42ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து 12 பந்தில் 50 ரன்கள் கடந்து காலத்தால் அழிக்க முடியாத உலக சாதனைகளை படைத்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதை விட 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
குறிப்பாக அந்த உலகக் கோப்பையில் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் தேசத்திற்காக விளையாடி அவர் புற்றுநோயிலிருந்தும் போராடி குணமடைந்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். அந்த வகையில் இந்தியாவின் உலகக் கோப்பை நாயகனுக்கு ஏராளமான ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். Read More...