Zimbabwe vs afghanistan: Cricket News & Match Updates
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து சதங்களை விளசிய ஜிம்பாப்வே வீரர்கள்; தடுமாறும் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிற்து. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பென் கரண் மற்றும் ஜெய்லார்ட் கும்பி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கும்பி 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பென் கரணுடன் இணைந்த கைடானோவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் பென் கரண் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 68 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கைடானோ 46 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டியான் மெயர்ஸும் 27 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சீன் வில்லியம்ஸுடன் இனைந்த கேப்டன் கிரேய்க் எர்வினும் சிறாப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. Read More...