Ajaz patel: Cricket News & Match Updates
IND vs NZ, 3rd Test: இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த நியூசிலாந்து அணி!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில்முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் கடந்த நவம்பர் 01ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அத்னபடி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர். Read More...