Au w vs en w odi: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia Women vs England Women 2nd ODI Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 14) மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. மறுபக்கம் இங்கிலாந்து மகளிர் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...