Mitchell starc: Cricket News & Match Updates
கம்பேக் போட்டியில் டக் அவுட்டான விராட் கோலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டியும், ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவனும் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரிவுடன் 8 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். Read More...