Pakistan cricket team: Cricket News & Match Updates
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 8 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் சொந்த மண் திரும்பிய பின், கேப்டன் பதவியில் இருந்து விலக பாபர் ஆசாம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் போதிய ஒத்துழைப்பு பாபர் ஆசாமிற்கு இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் பாபர் ஆசாம் கேப்டன்சியை காட்டமாக விமர்சித்து வந்தனர். Read More...