Sa20 league: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 107 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இப்போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் அறிமுக வீரராக டோனி டி ஸோர்ஸிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஸாக் கிரௌலி பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் எம்ஐ எமிரேட்ஸ் அணியில் காலின் இங்கிரம் பிளேயிங் லெவனில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி டி ஸோர்ஸி 2 ரன்னில் விக்கெட்டைஇழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். Read More...