Saint lucia kings: Cricket News & Match Updates
சிபிஎல் 2024, குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!
வெஸ்ட் இண்டீஸின் டி20 லீக் தொடரான கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கயானா அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து சத்தினார். Read More...