Tamil cricket news: Cricket News & Match Updates
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பில் சால்ட் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் பில் சால்ட் 56 ரன்கள் எடுத்தால், டி-20 சர்வதேசப் போட்டிகளில் 1000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டுவார். அதுமட்டுமின்றி இங்கிலாந்துக்காக அதிவேகமாக 1000 ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியளிலும் அவர் இரண்டாவது இடத்தைப் பிடிப்பார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 33 டி20 போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பில் சால்ட் 34.96 என்ற சராசரியில் 944 ரன்கள் எடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
துலீப் கோப்பை 2024: அபிமன்யூ ஈஸ்வரன் சதம்; தடுமாற்றத்தில் இந்தியா பி அணி!
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை 2024: சதமடித்து அசத்திய பிரதாம் சிங், திலக் வர்மா - இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா ஏ!
அரைசதமடித்து தனித்துவ பட்டியலில் இடம்பிடித்த் ஃபிரேசர் மெக்குர்க்!
6,0,4,4,6: அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய குயின்டன் டி காக்; வைரலாகும் காணொளி!
பார்படாஸ் ராயல்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான தருணம்: மோர்னே மோர்கல்
ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய மேத்யூ ஷார்ட்!
பவுண்டரி எல்லையில் அசாத்தலான கேட்சை பிடித்த ரோவ்மன் - ஹோல்டர் கூட்டணி; வைரலாகும் காணொளி!
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பில் சால்ட்; வைரலாகும் காணொளி!
இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது பெரிய பணியாகும் - தினேஷ் கார்த்திக்!
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
ENG vs AUS, 2nd T20I: லிவிங்ஸ்டோன் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16