Wi vs eng head to head: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs England 5th T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (நவ.18) செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். ஆதேசமயம் தொடரை இழந்துள்ள் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலைத் தேடும் என்பதாலும், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...