Indian cricket team: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2023: ஒரே குரூப்பில் இடம்பிடித்த இந்தியா - பாகிஸ்தான்!
கடந்த ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2022 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்குத்தான் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அப்போது கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணி வழக்கமாக பெரிய தொடரில் அழுத்தங்களுடன் விளையாடுவதைப் போல, இத்தொடரில் அழுத்தங்களுடன் விளையாடி படுமோசமாக சொதப்பியது.
முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அடுத்து ஹாங்ஹாங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீ்ழ்த்தி சூப்பர் 4 வாய்ப்பை உறுதி செய்தது. ஆனால், சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், அடுத்து இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்தியா அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. Read More...