Michael jones: Cricket News & Match Updates
T20 WC 2024: பந்துவீச்சாளர்களை மிரளவிட்ட முன்ஸி, ஜோன்ஸ்; இங்கிலாந்து அணிக்கு 109 ரன்கள் இலக்கு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தியது. அதன்படி பார்படாஸில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்தை பந்துவீச அழைத்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி - மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணியானது பவர்பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் 6.2 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. Read More...