Indian cricket team: Cricket News & Match Updates
அடிக்கடி உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது இது இரண்டும் ரசிகர்களுக்கு எரிச்சலூட்டும் - ஷுப்மன் கில்!
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான கில். இவர் இந்திய டெஸ்ட் அணியின் வருங்காலமாக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவிற்கு அவ்வப்போது ஓய்வு அளிக்கப்படும்போது ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதுவரை 14 இன்னிங்சில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் விளாசியுள்ளார். சராசரி 60-க்கு மேல் ஆகும்.
நியூசிலாந்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரின் முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். நேற்று நடைபெற்ற 2ஆவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 45 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு மூன்று முறை மழையால் போட்டி நிறுத்தப்பட்டு இறுதியாக கைவிடப்பட்டது. இப்படி நடப்பதால் வீரர்கள் ஏமாற்றம் அடைவதுடன் எரிச்சலும் அடைவார்கள். ரசிகர்களும் அதேபோல்தான். Read More...