Jos buttler: Cricket News & Match Updates
ஒருநாள் தொடருக்கான தோல்வி குறித்து பேசிய ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்ததால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த மூன்றாவது போட்டியின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் விளையாடிய இங்கிலாந்து அணியானது 259 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதனைத்தொடர்ந்து 260 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரிஷப் பந்த் 125 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். Read More...