Michael vaughan: Cricket News & Match Updates
இந்த முடிவை எடுத்தால் உடனடியாக ஓய்வை அறிவிப்பேன் - உஸ்மான் கவாஜா!
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை வார்னர் – கவாஜா கூட்டணி தொடங்கியது. இதில் வார்னர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் கவாஜா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 116 ரன்களாக இருந்தது. அப்போது திடீரென மழை பெய்ய, பின்னர் மழை நின்ற போதும் போதிய வெளிச்சம் இல்லாததால் இரண்டாம் நாள் ஆட்டம் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே டெஸ்ட் போட்டியின் போது போதிய வெளிச்சம் இல்லாத நேரங்களில் பிங்க் பாலை பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனை கூறினார். இதன் மூலமாக டெஸ்ட் போட்டிகளை டிராவாகாமல் தடுக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. Read More...