Royal challengers bangalore: Cricket News & Match Updates
ஆர்சிபி கோப்பை வெல்லாததற்கு இதுதான் காரணம் - கிறிஸ் கெயில்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வருகின்ற 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதுவரை நடைபெற்ற 15 ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இவை தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும், ஹைதராபாத் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறையும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் கடந்த 15 சீசன்கள் ஐபிஎல் தொடர்களில் விளையாடியும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை . குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்று முறை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது . ஆனாலும் அவர்களால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி ஒரு ராசி இல்லாத அணியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. Read More...