Srh vs rcb: Cricket News & Match Updates
அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன் - டிராவிஸ் ஹெட்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது என்றுதான் கூற வேண்டும். எனேனில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதமடித்ததுடன் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களையும் குவித்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 62 ரன்களையும், விராட் கோலி 42 ரன்களையும், இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்த நிலையிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 262 ரன்களை மட்டுமே எடுத்தது. Read More...