Tamil cricket news: Cricket News & Match Updates
பாஸ்பாலை கடைபிடித்தால் நிச்சயம் அணியிலிருந்து தூக்கிவிடுவார்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
கடந்த ஆண்டு முதலே இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் பாஸ்பால் என்ற அதிரடியான அணுகுமுறைக்கு டெஸ்ட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை போல தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைபிடிக்கும் இந்த முறைக்கு டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த புதிய அணுகு முறையில் மூலம் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மேக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியான அணுகுமுறை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்கள் இருவரும் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த பாஸ்பால் அணுகுமுறை மற்ற அணிகளிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புதிய அணுகுமுறையின் மூலம் இங்கிலாந்து அணி நியூசிலாந்து பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணியுடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மிக குறைந்த வித்தியாசங்களில் தோல்வியை தழுவியது. அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பாஸ்பால் முறையை குறை கூறினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; பாகிஸ்தான், இந்தியா முன்னிலை!
இந்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க விரும்பினேன் - ஷுப்மன் கில்!
தியோதர் கோப்பை: சாய் சுதர்ஷன் அபார சதம்; வெற்றி பாதையில் தெற்கு மாண்டலம்!
அடிப்படை வசதிகளையாவது எதிர்பார்க்கிறோம் - ஹர்திக் பாண்டியா!
இந்திய கிரிக்கெட்டராக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல - சஞ்சு சாம்சன்!
தி ஹண்ட்ரட் 2023: சதர்ன் பிரேவை வீழ்த்தி ட்ரெண்ட் ராக்கெட்ஸ் வெற்றி!
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!
ஒரு கேப்டனாக இது போன்ற வெற்றியைத் தான் நான் எதிர்பார்க்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
WI vs IND, 3rd ODI: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது இந்தியா!
எல்பிஎல் 2023: கண்டி அணியை வீழ்த்தி கலே அபார வெற்றி!
WI vs IND, 3rd ODI: சிக்சர் மழை பொழிந்த சாம்சன், ஹர்திக்; விண்டீஸுக்கு 352 டார்கெட்!
எல்பிஎல் 2023: செய்ஃபெர்ட் காட்டடி; 181 ரன்களை இலக்காக நிர்ணயித்து கலே!
தோனி கூறிய அறிவுரை எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது - ஷிவம் தூபே!
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஈயன் மோர்கன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16