Pakistan cricket team: Cricket News & Match Updates
பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் விளையாட வேண்டும் - ஷோயப் மாலிக்
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டும், இரண்டாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றும் அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அபாரமான தொடக்கத்தைப் பெற்ற பாகிஸ்தான் அணியானது, அதன்பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்து போதிய ரன்களைச் சேர்க்காததே தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் மீதான விமர்சனங்கள் தான் அதிகரித்துள்ளன. Read More...