Pakistan cricket team: Cricket News & Match Updates
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய சாதனை படைத்த பாபர் ஆசாம்!
அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்மாக லோர்கன் டக்கர் 51 ரன்களையும், ஹாரி டெக்டர் 32 ரன்களையும் சேர்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சைம் அயூப் 6 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். Read More...